விஷாலின் "மகுடம்" படத்தின் போஸ்டர்ஸ் :
நடிகர் விஷால் இயக்கி, நடித்துள்ள ‘மகுடம்’ திரைப்படத்தின் டீசர் நேற்று (2026 ஜூன் 10) வெளியாக இருந்தது. ஆனால் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் டீசர் வெளியீட்டை படக்குழு ஒத்திவைத்தது.
இதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ‘மகுடம்’ படத்தின் டீசர் இன்று (2026 ஜூன் 11) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தில் விஷாலுடன் அஞ்சலி மற்றும் துஷாரா விஜயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், மார்க் ஆண்டனி படத்தினை அடுத்து மகுடம் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Note: Only a member of this blog may post a comment.