இயக்குநர் கரு. பழனியப்பனின் ‘குக்கர்’ திரைப்படத்தின் தலைப்பை வெளியிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
‘பார்த்திபன் கனவு’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, தொடர்ந்து ‘சிவப்பதிகாரம்’, ‘பிரிவோம் சந்திப்போம்’, ‘மந்திரப்புன்னகை’, ‘சதுரங்கம்’, ‘ஜன்னல் ஓரம்’ உள்ளிட்ட கவனம் பெற்ற படங்களை இயக்கிய இயக்குநர் கரு. பழனியப்பன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
இந்த புதிய படத்தின் தலைப்பை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சிறப்பாக வெளியிட்டார். ‘குக்கர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், அதன் தலைப்பிலேயே தனித்துவமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் தலைப்பு வெளியீட்டு நிகழ்வில் நடிகர் திரு. காளி வெங்கட் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு. ராஜசேகரன் ஆகியோரும் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
விரைவில் படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.jpg)
.jpg)
No comments:
Note: Only a member of this blog may post a comment.