இந்த வாரம் (ஜூன் 19, 2026) திரையரங்குகளில் தமிழில் வெளியாகவுள்ள 7 புதிய திரைப்படங்களின் பட்டியல் :
இந்த வாரம் (ஜூன் 19, 2026) திரையரங்குகள் ஒளி வெள்ளத்தில் மின்னத் தயாராகின்றன. திரை ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் மொத்தம் 7 புதிய திரைப்படங்கள் வெள்ளித்திரையை கைப்பற்ற வருகின்றன.
அவற்றில், 5 படங்கள் முழுமையான நேரடி தமிழ் படைப்புகளாக பெருமையுடன் வெளிவருகின்றன — “நூறு சாமி”, “பதினெண் கீழ்க்கணக்கு”, “மக்கள் தலைவா”, “மனு”, “டார்க் ஜெயன்ட்”.
அதே நேரத்தில், இரு படங்கள் மொழி எல்லைகளை தாண்டி தமிழ் பார்வையாளர்களை சந்திக்கின்றன — “எங்கள் தங்கம்” மற்றும் “பாலன்” ஆகியவை தமிழ் மொழிமாற்ற வடிவில் திரையரங்குகளில் காட்சியளிக்கின்றன.
இந்த வாரம் (ஜூன் 19, 2026) வெளியாக உள்ள திரைப்படங்கள் ஓர் அலசல் ::
நூறு சாமி :
பிச்சைக்காரன் படத்தினை அடுத்து மீண்டும் இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி இணைந்துள்ள படம் , கிராமத்து பின்னணியில் உணர்ச்சி சார்ந்த “அம்மா - மகன் ” கதைக்களம்.
எங்கள் தங்கம் :
நந்தினி ரெட்டி இயக்கத்தில் , சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம், குடும்ப உணர்வு + ஆக்ஷன் + திரில்லர் கலந்த கதைக்களம்.
பாலன் :
மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரத்தின் அடுத்த படம் , ஒரு சிறுவன் தனது குழந்தைப் பருவத்தில் நடந்த சிக்கலான நிகழ்வுகளுக்குப் பிறகு, தன் காணாமல் போன தாயைத் தேடும் பயணத்தில் செல்லும் கதையாக உருவாகியுள்ளது இந்த பாலன் படம் .
மக்கள் தலைவா :
ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தில் ரவி மரியா, அக்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத் மற்றும் பலர் நடித்துள்ளனர் , அரசியல் காமெடி கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது .
டார்க் ஜெயன்ட் :
இயக்குநர் K.S. கிஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டார்க் ஜெயன்ட்' (Dark Giant) திரைப்படம், உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஹாரர் திரில்லர் திரைப்படமாகும்.
பதினெண் கீழ்க்கணக்கு :
விஷ்ணு ராஜன் இயக்கத்தில் , அர்ஜுன் பணிகண்டன் நடித்துள்ள படம் பதினெண் கீழ்க்கணக்கு.
மனு :
துர்கா P .S இயக்கத்தில் , ஸ்ரீயுத் , கருடா ராம் மற்றும் பலர் நடித்துள்ள படம் தான் மனு .
No comments:
Note: Only a member of this blog may post a comment.