சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடித்துள்ள "ஹார்ட்டின்" படத்தின் டிரெய்லர் !
புதிய கதையையும் புதுமையான காட்சியமைப்பையும் தாங்கி வரும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு, முகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையில் உருவாகியுள்ள பின்னணி இசையும் பாடல்களும் படத்தின் உணர்வுகளை மேலும் உயிர்ப்பிக்கின்றன.
காதல், உணர்வுகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களின் கலவையாக உருவாகியுள்ள ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

No comments:
Note: Only a member of this blog may post a comment.