Facebook

test

Nooru Saami Movie Tamil Trailer

 தாயைத் தெய்வமாக அல்ல, மனிதராக பார்க்கும் மகனின் கதை! – ‘நூறு சாமி’ டிரெய்லர் வெளியீடு : 


‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சசியும் நடிகர் விஜய் ஆண்டனியும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘நூறு சாமி’. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் சுவாசிகா, அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் குறித்து பேசிய இயக்குநர் சசி, “‘பிச்சைக்காரன்’ படத்தின் நாயகன் தனது தாயைத் தெய்வமாக மதித்தான். ஆனால் ‘நூறு சாமி’ படத்தின் நாயகன், தனது தாயை ஒரு மனிதராக பார்க்கத் தொடங்குகிறான். அதுவே இந்தப் படத்தின் மையக்கரு” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தப் படத்தில் சுவாசிகாவின் ஆழமான நடிப்பும், விஜய் ஆண்டனியின் வித்தியாசமான கதாபாத்திர வெளிப்பாடும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வரும் 2026 ஜூன் 19  ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தின் டிரெய்லரை தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. உணர்வுப்பூர்வமான கதைக்களம் மற்றும் வலுவான கதாபாத்திரங்களால் கவனம் ஈர்த்துள்ள இந்த டிரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.