Facebook

test

Mudharkanal Movie Teaser | Tamil

 போதைப்பொருளின் பின்னணியைப் பேசும் 'முதற்கனல்' பட டீசர் வெளியீடு!


ஸ்ரீகெங்கா புரொடக்ஷன்ஸ்
சார்பில் ஆர். போத்திராஜ் தயாரிப்பில், 'அப்பா வேணாம்ப்பா', 'அதையும் தாண்டி புனிதமானது' ஆகிய படங்களை இயக்கிய ஆர். வெங்கடரமணன் இயக்கத்தில் உருவாகியுள்ள "முதற்கனல்" திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் புதுமுகங்களான அஸ்வின், விக்னேஷ், ராஜேஷ், யோகேஷ், லட்சுமணன், ஆதி, அரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

டீசர் வெளியீட்டைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் ஆர். வெங்கடரமணன், "போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் சீரழிவு, அதன் பின்னணியில் இருக்கும் உளவியல் சிக்கல்கள் மற்றும் அதனால் ஒவ்வொரு குடும்பமும் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளோம். சமூகத்திற்கு அவசியமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது," என்று தெரிவித்துள்ளார்.



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.