பவிஷ்–நாக துர்கா ஜோடியின் 'லவ் ஓ லவ்' டிரெய்லர் வெளியானது!
'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தைத் தொடர்ந்து நடிகர் பவிஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் 'லவ் ஓ லவ்'. இப்படத்தில் பவிஷுக்கு ஜோடியாக நாக துர்கா நடித்துள்ளார்.
இவர்களுடன் இயக்குநர்கள் செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநர் லஷ்மண் இயக்கிய 'போகன்', 'பூமி' ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மகேஷ் ராஜேந்திரன், இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார்.
காதல் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'லவ் ஓ லவ்' திரைப்படம் வரும் 2026 ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், படக்குழு தற்போது 'லவ் ஓ லவ்' படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது.
'லவ் ஓ லவ்' படத்தின் டிரெய்லர் :

No comments:
Note: Only a member of this blog may post a comment.