Facebook

test

Ashwin Kumar Next Film Title Good News

அஸ்வின் குமார் நடிக்கும் புதிய படம் "குட் நியூஸ்" : 

இயக்குநர் பாண்டிராஜ் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நாகேந்திர முருகன், தனது முதல் இயக்குநர் பயணத்தை "குட் நியூஸ்" என்ற குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படத்தின் மூலம் தொடங்குகிறார்.

குடும்ப உறவுகளின் உணர்வுகளையும், நகைச்சுவையையும், மனதை வருடும் தருணங்களையும் இணைத்து உருவாகும் இப்படத்தில், அஸ்வின் குமார் கதாநாயகனாகவும், மலையாள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இன்ஃப்ளுயன்ஸர் கல்யாணி அணில் கதாநாயகியாகவும் இணைந்துள்ளனர்.

இவர்களுடன் முன்னணி நடிகர்களான ஜெயராம், ஆஷா சரத், முத்துக்குமார், ஜாபர், குரேஷி, தீபா, வினோதினி, திவ்யா, மணிமேகலை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து படத்திற்கு வலுசேர்க்கின்றனர்.

இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு, பிரவீன் குமார் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்விநாத் ஜெயக்குமார் தயாரிக்கும் இப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக உருவாகி உள்ளது .





No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.