ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் "டிராகன்" படத்தின் கிளிம்ஸ் வீடியோ (தமிழ்) :
தேவாரா படத்திற்கு பிறகு ‘கே.ஜி.எப்’ புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘டிராகன்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார் ஜூனியர் என் டி ஆர் , மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜூனியர் என் டி ஆர் ஜோடியாக ருக்குமணி வசந்த் நடிக்கிறார் , கே.ஜி.எப்’ புகழ் ரவி பஸ்ரூர் இசை அமைக்கிறார்.
பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு 2027 ஜூன் 11ம் தேதி தெலுங்கு , தமிழ் , கன்னடம் , மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .
இந்நிலையில் , இன்று (மே 20) ஜூனியர் என்டிஆர் பிறந்தாளையொட்டி படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது .

No comments:
Note: Only a member of this blog may post a comment.