சாக்ஷி அகர்வால் நடித்துள்ள "தீயோர் கூடம்" படத்தின் டிரெய்லர் வெளியானது !
ரூல் பிரேக்கர்ஸ் புரொடக் ஷன் மற்றும் தியா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஜெகன் நாராயணன், சக்திவேல், வீரமணி மற்றும் கண்ணன் இணைந்து தயாரித்துள்ள 'தீயோர் கூடம்' படத்தில் நடிகை சாக்ஷி அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க , இவருடன் டேனியல் ஆனி போப், வையாபுரி, சாம்ஸ், வசந்தி, ஜேஸ்பர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒரு வீட்டில் நடக்கும் கொலை , அதில் சிக்கும் மூன்று பேர் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை , ஒரே நாளில் நடக்கும் சம்பவமாக இயக்குனர் சக்திவேல் எழுதி இயக்கியுள்ளார் . வசந்த் இசைப்பேட்டை இசையமைத்துள்ளார். பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

No comments:
Note: Only a member of this blog may post a comment.