கயல் சந்திரன் நடித்துள்ள "சிங்கா" படத்தின் டீசர் வெளியானது !
வேலாயுதம் ராஜேந்திரன் தயாரிப்பில் , மனோஜ் சின்னசாமி இசையில் , அறிமுக இயக்குனரான ராஜதுரை சிங்கம் இயக்கத்தில் , கயல் படத்தில் நடித்த சந்திரன் நாயகனாகவும் , மலையாள நடிகைகளான சிஜா ரோஸ், மற்றும் மீனாட்சி ரவிந்திரன் நாயகிகளாகவும் , இவர்களுடன் ஆதித்யா கதிர், சூப்பர் குட் சுப்ரமணி, டி.எஸ்.ஆர், அரிஸ்டோ சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ள "சிங்கா" படத்தின் டீசர் வெளியாகியுள்ளது .
அன்பு, பிணைப்பு, தேடல், நம்பிக்கை போன்ற மனிதனின் மனநிலைகளையும், செல்லப்பிராணியின் தூய உணர்வுகளையும் காட்டும் வகையில் "சிங்கா" படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது , மேலும் "சிங்கா" டீசர் இன்று வெளியாகியுள்ள நிலையில் படத்தின் இசை , ட்ரைலர் , மற்றும் ரிலீஸ் தேதி விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது .

No comments:
Note: Only a member of this blog may post a comment.