யாஷின் "டாக்ஸிக்" படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு !
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் , கே.ஜி.எப் புகழ் யாஷுடன் நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக் ' படம் வரும் 2026 மார்ச் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் , தற்போது மிடில் ஈஸ்ட் பகுதிகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதியை வரும் 2026 ஜூன் 4 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது . உலக அளவில் எல்லா தரப்பு ரசிகர்களும் இப்படத்தை கண்டுகளிக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது .
எனவே தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , ஹிந்தி , ஆங்கில மொழிகளில் உருவாகும் திரைப்படம் வரும் 2026 ஜூன் 4 ஆம் தேதி உலகலகவில் திரையரங்குகளில் வெளியாகும் .


No comments:
Note: Only a member of this blog may post a comment.