ஹீரோயின் நிறம் குறித்த சர்ச்சை - எனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது : கென் கருணாஸ்
கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள "யூத்" படம் வரும் 2026 மார்ச் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் , சமீபத்தில் படத்திற்கான நாயகி தேர்வு பற்றி ஒரு கருத்து தெரிவித்து இருந்தார் , அது சர்ச்சை கிளப்பிய நிலையில் அதற்கான விளக்கத்தை தற்போது கொடுத்துள்ளார் ..
நான் கருப்பு நிறத்திலுள்ள பெண்களை எனது படத்தில் நடிக்க வைக்க அணுகவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். நானே கருப்பு நிறத்திலுள்ளவன் தான். அப்படியிருக்கையில் கருப்பு நிறத்திலுள்ள பெண்ணுடன் நடிக்க மாட்டேன் என்று நான் ஏன் சொல்வேன்.
உண்மையாகச் சொன்னால், ஒரு ஹீரோயின் கதாபாத்திரத்திற்காக என் நிறத்துக்கு அருகிலான நிறம் கொண்ட ஒரு பெண்ணைத்தான் தேடிக்கொண்டிருந்தேன், ஆனால் அவர்கள் அந்தப் படத்தில் நடிக்க தயாராக இல்லை. உண்மையில் நான் சொல்ல வந்தது, என் இயக்கத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை (believability) குறைவாக இருந்தது என்பதுதான். ஆனால் அது, நான் கருப்பாக இருப்பதால் ஹீரோயின்கள் என்னுடன் நடிக்க விரும்பவில்லை என்று சொன்ன மாதிரி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது.
இது ஒருபோதும் நிறத்தை பற்றிய விஷயம் இல்லை அல்லது பிடிவாதம் இல்லை. அந்தக் காலத்திலும் நிறைய dusky heroines இருந்தார்கள். இப்போதும் ஜோ படத்தின் ஹீரோயின் மற்றும் டூரிஸ்ட் பேமிலி படத்தில் வரும் யோகலக்ஷ்மி எனக்கு மிகவும் பிடித்தவர்கள்.
நான் கொஞ்சம் அதிகமாகச் சொன்னது ஒன்று தான் — என்னுடைய படத்தை மறுத்துவிட்டு முட்ட கலக்கி பாடலுக்கு ரீல்ஸ் செய்தார்கள் என்று. அதை நான் எதிர்காலத்தில் சொல்லக்கூடாது. நான் ஆடிஷன்ஸ் நடத்தினேன், ஆனால் பலர் அதற்கு வரவே இல்லை என்று தெரிவித்துள்ளார் .

No comments:
Note: Only a member of this blog may post a comment.