Facebook

test

March 13 2026 Theatrical Release Movies Tamil

  இன்று 2026  மார்ச் 13-ம் தேதி திரையரங்குகளில் தமிழில் வெளியாகியுள்ள படங்கள் :



1. கொலைச்சேவல் : 


ஆர் பி பிலிம்ஸ் - ஆர் பி பாலா தயாரிப்பில் , சந்தன் இசையில் , இயக்குனர் துதிவாணன் இயக்கத்தில் நாயகனாக கலையரசன்,  நாயகியாக தீபா , இவர்களுடன்  பால சரவணன், ஆதவன், கஜராஜ், அகரன் பாலு மற்றும் பலர்  நடித்துள்ள  படம் "கொலைச்சேவல்" .

2. கெணத்த காணோம் : 



மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையாவின் இயக்கத்தில் , கதையின் நாயகனாக யோகிபாபு  ,நாயகியாக லவ்லின் சந்திரசேகர் இவர்களுடன் ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர்   நடித்துள்ள படம்  "கெணத்த காணோம்" .

3. வெஞ்சன்ஸ் : 



ஏ.சி. புரொடக்ஷன்ஸ் (AC Productions) சார்பில் ஏ.பி. அசோக் குமார் தயாரிப்பில் , ராகுல் அஷோக் இயக்கத்தில்,அபர்ணதி முதன்மை கதாபாத்திரத்திலும் , இளவரசு ,  ஜான் விஜய் , லிவிங்ஸ்டன்,  ஒய்.ஜி. மகேந்திரன், காளி வெங்கட், சுரேஷ் சக்ரவர்த்தி என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள படம் ‘வெஞ்சன்ஸ்’  .

4. வவ்வல்ஸ்; அன் அட்​லஸ் ஆஃப் லவ் :



"வவ்வல்ஸ்; அன் அட்​லஸ் ஆஃப் லவ்" படம் 5 கதைகளைக் கொண்டது ,  இப்​படத்தை திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்​தோஷ் ரவி மற்​றும் ஜெகன் ராஜேந்​திரன் ஆகிய 5 இயக்​குநர்​கள் இயக்​கி​யுள்​ளனர், யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்​யுக்தா விஸ்​வ​நாதன், ராஜ் அய்​யப்​பா, தீபக் பரமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர் .

5. போலீஸ் ஃபேமிலி : 



மலையசாமி ஏ.எம் தயாரிப்பில் , பாலு இயக்கத்தில் , சரவணன் (பருத்திவீரன்), ராஜா மலையசாமி, நிஷா துபே, காதல் சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ள படம் "போலீஸ் ஃபேமிலி" , ஒரு காவல்துறை அதிகாரிக்கும் , தாத்தாவுக்கும் இடையே நடைபெறும் மோதலைக் கதைக்களமாக கொண்டுள்ளது  இப்படம் 

6. அந்தோணி : 



இசைஞானி இளையராஜா இசையில் , அறிமுக இயக்குநர்கள் சுகிர்தன் கிறிஸ்துராஜா = ஜெனோசன் ராஜேஷ்வர் இயக்கத்தில் , கயல் வின்சென்ட், டி.ஜே.பானு, சுதர்சன் ரவீந்திரன், செளமி, அருள்தாஸ், நிகழ்கள் ரவி மற்றும் பலர் நடித்துள்ள "அந்தோணி" படம் ஈழத்தின் கடற்கரை வாழ்வியலை பற்றி பேசுகிறது .

7. ஆரண்ய காண்டம் : 



 தியாகராஜன் குமாரராஜா இயக்குனராக அறிமுகமான "ஆரண்ய காண்டம்" திரைப்படம் ரீ ரிலீசாக உள்ளது .

8. திவ்யா 

9. கெளுத்தி 




No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.