ஜி வி பிரகாஷ் ஒரு பன்முகத் திறமையாளர் - இயக்குனர் வெங்கி அட்லூரி
ஜி வி பிரகாஷ் நடித்துள்ள "ஹேப்பி ராஜ்" படம் வரும் 2026 மார்ச் 27 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் , தற்போது படத்திற்கான புரொமோஷன் பணிகளில் படக்குழு மும்முரமாக உள்ளது, இந்நிலையில் சமீபத்தில் தெலுங்கில் நடைபெற்ற புரொமோஷன் விழாவில் பங்கேற்ற இயக்குனர் வெங்கி அட்லூரி படக்குழுவையும் மற்றும் ஜி வி பிரகாஷ் பற்றியும் பாராட்டி பேசினார் , இவரது இயக்கத்தில் வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் படத்திற்கும் ஜி வி பிரகாஷ் இசையமைத்திருந்தார் , மேலும் இவரது இயக்கத்தில் சூர்யா நடிக்கும் "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" படத்திற்கும் ஜி வி பிரகாஷ் தான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது .
"ஹேப்பி ராஜ்" பட புரொமோஷன் நிகழ்வில் இயக்குனர் வெங்கி அட்லூரி பேசியதாவது : நான் இங்கு இருப்பதற்குக் காரணம் ஜி வி பிரகாஷ். டிரெய்லரைப் பார்த்த பிறகு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, தலைப்பைப் போலவே !. பார்வையாளர்களும் மகிழ்ச்சியடைவார்கள் என்றும், தயாரிப்பாளரும் நன்றாக சம்பாதிப்பார் என்றும் நம்புகிறேன்.
என் நண்பர் தல ஜி வி, அவர் எப்படி நடிப்பையும் இசையையும் ஒருங்கே கையாளுகிறார் என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள். பொதுவாக ஒரு மெட்டை அமைக்க ஒரு வாரம் ஆகும், ஆனால் ஜிவியால் வெறும் 45 நிமிடங்களில் அதை வழங்க முடியும். சார் படத்தின் பாடல் அப்படித்தான் உருவாக்கப்பட்டது.
சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திலும் அவர் அருமையாக இசையமைத்துள்ளார் , முதல் சிங்கிள் விரைவில் வருகிறது , அவர் உண்மையிலேயே ஒரு பன்முகத் திறமையாளர் என்று பாராட்டி பேசினார் .
No comments:
Note: Only a member of this blog may post a comment.