இதுவரை யாரும் பார்த்திராத டிரிபிள் ஆக்சன் கதையில் லெஜண்ட் சரவணன்:
லெஜெண்ட் படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி , தற்போது லீடர் படத்தில் நடித்து முடித்து வெளியீட்டிற்கு தயாராகி வரும் லெஜெண்ட் சரவணன் , தனது அடுத்த படம் பற்றி சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார் . அவர் கூறியதாவது ,
"எனது அடுத்த படத்தில், நான் ஒரு டிரிபிள் ஆக்சன் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது எனது மூன்றாவது படம், மேலும் இது எனக்கு மிகவும் சவாலானது. இதன் கதைக்களம் மிகவும் புதுமையானது, இது போன்ற ஒரு டிரிபிள் ஆக்ஷன் திரைப்படக் கதையை இதுவரை யாரும் எழுதியதில்லை, படம் தற்போது முன் தயாரிப்பு (Pre-production) நிலையில் உள்ளது. இப்படத்தினை பற்றிய முழு விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்" .

No comments:
Note: Only a member of this blog may post a comment.