Facebook

test

Maragadha Naanayam 2 Movie Pooja Photos

 பூஜையுடன் துவங்கிய ' மரகத நாணயம் 2' படத்தின் படப்பிடிப்பு :

ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில், ஆதி , நிக்கி கல்ராணி , ஆனந்த் ராஜ் , முனீஷ்காந்த் , அருண்ராஜா காமராஜ் மற்றும் பலர் நடித்து 2017-ல் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு மற்றும் வெற்றி பெற்ற  ஃபேண்டஸி நகைச்சுவைப் படமான "மரகத நாணயம்" படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது.

மரகத நாணயம் 2 வில் , ஆதி , நிக்கி கல்ராணி , ஆனந்த் ராஜ் , முனீஷ்காந்த் , அருண்ராஜா காமராஜ் இவர்களுடன் புதியதாக சத்யராஜ் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளனர் , முதல் பாகத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவணனே இப்படத்தையும் இயக்குகிறார் . பேஷன் ஸ்டுடியோஸ் (Passion Studios) மற்றும் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன .

சமீபத்தில் மரகத நாணயம் 2 படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது , இதில் இப்படக்குழுவுடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கார்த்தி , வைபவ். இயக்குனர்களான வெங்கட் பிரபு , ரவிக்குமார் , தமிழ் மற்றும் பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர் .








No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.