Facebook

test

February 6 2026 Tamil Theatrical Release Movies

 வரும் பிப்ரவரி 6  , 2026  அன்று தமிழில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்கள் ஓர் பார்வை :



1.வித் லவ் : 


 டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாகவும்  மற்றும் அனஸ்வரா ராஜன் ஹீரோயினாகவும் நடித்துள்ள "வித் லவ்" படம் - இந்தக்கால இளைஞர்களை கவரும் வகையில் காதல் மற்றும் காமெடி கலந்த கதைக்களத்தை கொண்டது, 

டூரிஸ்ட் பேமிலி படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மதன் இப்படத்தை இயக்கியுள்ளார், ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார் . எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

2.காதல் கதை சொல்லவா : 


ஜெயராம், நகுல், ஆத்மிய ராஜன், ரித்திக்கா சென், ரமேஷ் திலக் ஆகியோருடன் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள "காதல் கதை சொல்லவா" . இப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஓர் பீல்-குட் காதல் கதையாக உருவாகியுள்ளது. 

இந்த படத்தை சனில் இயக்கியுள்ளார் , எம் ஜெயச்சந்திரன் மற்றும் சரத் இணைந்து இசையமைத்துள்ளார் . பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில், ஆகாஷ் அமையா ஜெயின் தயாரித்துள்ளார் .

3.யோகிடா : 


போலீஸ் அதிகாரியாக நடிகை சாய் தன்ஷிகா, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'யோகிடா'. இதில் ஷாயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 இந்த படத்தை கவுதம் கிருஷ்ணா இயக்கியுள்ளார்,  ஜப்பட்மா சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அருணகிரி மற்றும் ராஜ்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

4. ரெட் லேபிள் :


 கோவையை மையமாகக் கொண்டு , ஒரு கொலையால், இழந்த அடையாளத்தை மீட்கப் போராடும் சில மனிதர்களின் கதைதான் "ரெட் லேபிள் " படம் , இப்படத்தில் கதாநாகயனாகவும் , தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார் லெனின் , நாயகியாக அஸ்மின் நடித்துள்ளார்.

இப்படத்தை பொன்.பார்த்திபன் கதை, திரைக்கதையில், கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார்.

5. அனோமி : 


 திரில்லர் கதைக்களத்தில்,  ரஹ்மான் & பாவனா நடிப்பில் ,  அறிமுக இயக்குநர் ரியாஸ் மரத் எழுதி இயக்கியுள்ள  படம்  'அனோமி: தி ஈக்வேஷன் ஆஃப் டெத் .  

6. கில்லி மாப்பிள்ளை : 



மீனா  வெங்கடாச்சலம் தயாரிப்பில் , K.N.பத்மராஜா இயக்கத்தில் , P.V.குமார் இசையில் உருவாகியுள்ள படம் "கில்லி மாப்பிள்ளை".

7. சிலம்பாட்டம் : 


கடந்த 2008-ம் ஆண்டு சிலம்பரசன்  இரண்டு வேடங்​களில் நடித்து வெளிவந்த  ‘சிலம்பாட்டம்' திரைப்​படம் புது பொலிவுடன் மீண்டும் வரும் 2026 பிப்ரவரி ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .





No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.