வரும் 2025 டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் தமிழில் வெளியாகவுள்ள படங்கள் ஓர் பார்வை :
அங்கம்மாள் :
ஸ்டோன் பெஞ்ச், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் பிரோ மூவி ஸ்டேஷன் ஆகிய நிறுவங்கள் தயாரிப்பில் , முகமது மக்பூல் மன்சூர் இசையில் , விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், கீதா கைலாசம் நடித்துள்ள அங்கம்மாள் படம் வரும் 2025 டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது
நிர்வாகம் பொறுப்பல்ல :
ஆர்கே ட்ரிம் ஃபேக்டரி சார்பில் டி.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் , எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் 'நிர்வாகம் பொறுப்பல்ல' படம் வரும் 2025 டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .
மேலும் இப்படத்தில் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, அகல்யா வெங்கடேசன் மற்றும் பலர் நடித்துள்ளனர், ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார் .
சாவீ (சாவு வீடு)
ஆண்டன் அஜித் தயாரித்து இயக்கியுள்ள சாவீ (சாவு வீடு) படம் வரும் 2025 டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .
இப்படத்தில் கைதி, மாஸ்டர் படங்களில் நடித்த உதய் தீப், பேட்டை படத்தில் நடித்த ஆதேஷ்பாலா ஆஷிகா, ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், பிரேம் K. சேஷாத்ரி, ஷ்யாம் ஜீவா, பவனா மற்றும் பலர் நடித்துள்ளனர்,
கொஞ்ச நாள் பொறு தலைவா :
ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், S.முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், நிஷாந்த் ரூஸ்ஸோ , காயத்திரி ஷான் , லொள்ளு சபா மாறன் , மொட்டை ராஜேந்திரன் , மற்றும் பலர் நடித்துள்ள “கொஞ்ச நாள் பொறு தலைவா” படம் வரும் 2025 டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .
சாரா :
ரஜித் கண்ணா இயக்கத்தில் , கார்த்திக் ராஜா இசையில் , விஜய் விஷ்வா, சாக்ஷி அகர்வால், யோகிபாபு ரோபோ சங்கர், பொன்வண்ணன், அம்பிகா, ரேகா நாயர் மற்றும் பலர் நடித்துள்ள "சாரா" படம் வரும் 2025 டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .
காவலன் (ரீ ரிலீஸ் ) :
சித்திக் இயக்கத்தில் , வித்யாசாகர் இசையில் , விஜய் , அசின் , வடிவேலு , ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்து கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான "காவலன்" படம் மீண்டும் வரும் 2025 டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .
%20Release%20Movies%20in%20Kollywood%20(Tamil).png)






No comments:
Note: Only a member of this blog may post a comment.