கிஷன் தாஸ் - ஹர்ஷத் கான் நடித்துள்ள ஆரோமலே பட டிரெய்லர் வெளியானது !
பிரபல யூடியூபரான கிஷன் தாஸ், முதலும் நீ முடிவும் நீ, சிங்க், தருணம் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது ஆரோமலே எனும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் , மேலும் இப்படத்தில் விஜே சித்துவுடன் இணைந்து பணியாற்றி இளைஞர்களை கவர்ந்த யூடியூபர் ஹர்ஷத் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மினி ஸ்டுடியோஸ் நிறுவன தயாரிப்பில் , சித்து குமார் இசையில் , சாரங் தியாகு இயக்கியுள்ள "ஆரோமலே" படம் வரும் 2025 நவம்பர் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது டிரெய்லர் வெளியாகியுள்ளது !

No comments:
Note: Only a member of this blog may post a comment.