தக் லைஃப் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு, பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி தேதிகள் அறிவிப்பு :
மணிரத்னம் இயக்கத்தில் , ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் , கமல்ஹாசன் , சிலம்பரசன் , அபிராமி , திரிஷா , அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ் மற்றும் பலர் நடிக்கும் தக் லைஃப் படம் வரும் 2025 ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .
இந்தநிலையில், மே 16-ஆம் தேதி நடைபெற இருந்த ‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழா போர்ப்பதற்றம் காரணமாக,ஒத்திவைக்கப்பட்டது. தற்போது தக் லைஃப் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு, பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி தேதிகள் அறிவிப்பு வெளிவந்துள்ளது .
தக் லைஃப் படத்தின் ட்ரைலர் தமிழ் , ஹிந்தி , மலையாளம் , தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது , இதன் படி வரும் 2025, மே 17 ஆம் தேதி தமிழ் டிரைலரும் , மே 20 ஆம் தேதி ஹிந்தி டிரைலரும் , மே 21 ஆம் தேதி மலையாளம் டிரைலரும் , மே 22 ஆம் தேதி தெலுங்கு டிரைலரும் வெளியாகவுள்ளன.
அதனை தொடர்ந்து தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா மே 24 ஆம் தேதி சென்னை சாய் ராம் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் தக் லைஃப் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி, மே 26 ஆம் தேதி டெல்லியிலும் , மே 27 ஆம் தேதி பெங்களூரிலும் , மே 28 ஆம் தேதி திருவனந்தபுரத்திலும், மே 29 ஆம் தேதி விசாகபட்டினத்திலும் , மே 31 ஆம் தேதி மலேசியாவிலும் மற்றும் ஜூன் 1 ஆம் தேதி துபாயிலும் நடைபெற உள்ளது.
தக் லைஃப் திரைப்படம் வரும் 2025 ஜூன் 5 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது.
No comments:
Note: Only a member of this blog may post a comment.