Facebook

test

Simbu and Santhanam Reunite for STR 49

 சிலம்பரசன் படத்தில்,  மீண்டும் காமெடியனாக களம் இறங்கும் சந்தானம் !


சிலம்பரசனின் 49 வது படத்தை , பார்க்கிங்  பட இயக்குனர்  ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார் , சாய் அபயங்கர் இசையமைக்கிறார் . இப்படத்தில் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வலம் வந்தன , தற்போது இதனை சந்தானம் உறுதி செய்துள்ளார் .

தற்போது கதாநாயகனாக வலம் வரும் சந்தானம் , சிம்புவின் வேண்டுகோளுக்கு இணங்க இப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் , மேலும் இப்படத்தில் சிம்புவுக்கு இணையாக சந்தானம் கதாபாத்திரம் இருக்குமென்று சொல்லப்படுகிறது .

சமீபத்தில் ஓர் நாளிதழுக்கு பேட்டியளித்த சந்தானம் ,  சிம்புவிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது , எனது அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறினார் , அவர் கேட்டு நான் இல்லை என சொல்ல முடியாது , ஆம் என்றேன் . நாங்கள் இணையும் இந்த படத்தில் எங்களுடைய காமெடி மற்றும் சிறந்த ஆக்ஷனை பார்க்கலாம் .


No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.