Facebook

test

Minor Tamil Movie Launch | Title Look

  ஃபைண்டர் இயக்குனரின் அடுத்த படம் மைனர் ,  பூஜையுடன் துவக்கம்   


ஃபைண்டர் படத்தின் இயக்குனர் வினோத் ராஜேந்திரன் , அடுத்ததாக "மைனர்" என்ற தலைப்பில் ஓர் புதிய படத்தை இயக்கவுள்ளார் , இப்படத்தில் இலங்கை ராப் பாடகர் வாஹீசன் ஹீரோவாக அறிமுகமாகிறார் ,  ஜனனி நாயகியாகவும் , சார்லி முக்கிய காதாபாத்திரத்தில் நடிக்கிறார்  , சூர்ய பிரசாத் இசையமைக்கிறார், அரபி புரொடக்‌ஷன் , MAY DAY மற்றும் வியான் வென்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

இளைஞர்களை கவரும் விதமாக முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காதலை கொண்டாடும் படமாக இருக்கும் இந்த "மைனர்" என  இயக்குனர் வினோத் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார் .  "மைனர் படத்தின்  அறிமுக மற்றும் தலைப்பு வெளியீட்டு விழா , இன்று (ஏப்ரல் 30,2025) சென்னை சாலி கிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது .  விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.