LK அக்ஷய்குமாரின் 3வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!
திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப் பெற்ற ‘சிறை’, விரைவில் வெளியாகவுள்ள ‘ராவடி’ என அடுத்தடுத்து கவனம் ஈர்த்து வரும் LK அக்ஷய்குமார், தனது திரைப்பயணத்தின் அடுத்த கட்டமாக உருவாகும் மூன்றாவது படத்தில் இன்று இணைந்துள்ளார்.
அறிமுக இயக்குனர் விஷ்ணு அமரன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று கோலாகலமாக தொடங்கியது.
LK அக்ஷய்குமாருடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தின் துவக்க விழாவில் இயக்குனர்கள் H. வினோத், துரை செந்தில்குமார், சிறுத்தை சிவா உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Note: Only a member of this blog may post a comment.