Facebook

test

Coming 2026 September 24 and 25 Theatrical Release Movies in Tamil

2026 செப்டம்பர் 24 மற்றும் 25-ம் தேதி திரையரங்குகளில் தமிழில் வெளியாகும்  திரைப்படங்கள்!


வரும் 2026 செப்டம்பர் 24 மற்றும் 25-ம் தேதி தமிழ் திரையுலகில் பல்வேறு ஜானர்களில் உருவாகியுள்ள திரைப்படங்கள் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன. அவற்றில் முக்கியமாக வெளியாகும் படங்கள் குறித்து பார்க்கலாம்.

தி பாரடைஸ் :

எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், நானி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி பாரடைஸ்’. இப்படத்தில் நானியுடன் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

1980-களின் பின்னணியில், செகந்திராபாத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட பழங்குடியின சமூகத்தினர், அமைப்புரீதியான அடக்குமுறைக்கு எதிராக தங்களது உரிமைகளுக்காக முன்னெடுக்கும் போராட்டத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது.

பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வரும் 2026 செப்டம்பர் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மீசைய முறுக்கு 2

இசைக் கலைஞர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தை ஹிப் ஹாப் தமிழா இயக்கி நடித்துள்ளார். குஷ்பு சுந்தர்.சி மற்றும் ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரித்துள்ள இப்படத்தில், ஹிப் ஹாப் தமிழாவுடன் கெத்திகா சர்மா, சைத்ரா ஜெ. ஆச்சார், ரம்யா ரங்கநாதன், பாபா பாஸ்கர், கருணாஸ், நாசர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி  திரையரங்குகளில் வெளியாகிறது.

டோரதி

ஜியோ ஸ்டுடியோஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் நட்பு மற்றும் ஆக்‌ஷன் கலந்த கதைக்களத்தில், மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. சனந்த் ரிஷிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

அன்பில் அவன்

காதல் மற்றும் ஆக்‌ஷன் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தை, ‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதையில், அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார். ஹேப்பி ஹை பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் இணைந்து நடித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி  திரையரங்குகளில் வெளியாகிறது.

லெனின் பாண்டியன்

மணல் கடத்தல் மாஃபியாக்களுக்கு எதிரான போராட்டம், விவசாயிகளின் ஒற்றுமை, காவல்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘லெனின் பாண்டியன்’. டி.டி. பாலச்சந்திரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தர்ஷன் கணேசன், ஸ்ரிதா ராவ், கங்கை அமரன், ரோஜா, போஸ் வெங்கட், ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், ஆர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தி கிராண்ட் மாஸ்டர்

செஸ் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற தனது மகனின் கனவை நிறைவேற்றப் போராடும் ஒரு தாயின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’. வெற்றிச்செழியன் இயக்கியுள்ள இப்படத்திற்கு தினேஷ் ஆண்டனி இசையமைத்துள்ளார். அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு, மனோ மதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி  திரையரங்குகளில் வெளியாகிறது.

E1

சதா நாடார் மற்றும் மோனிகா செலீனா இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘E1’. வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி  திரையரங்குகளில் வெளியாகிறது.

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.