சூரி – சுஹாஸ் இணையும் ‘மண்டாடி’… டீசர் வெளியானது!
கடலோடு போராடி, வாழ்க்கையைத் தேடி பயணிக்கும் மீனவ மக்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி மற்றும் சுஹாஸ் இணைந்து நடித்துள்ள இப்படத்தில், மீனவர்களின் காதல், போராட்டம், விளையாட்டு மற்றும் வாழ்வியல் ஆகியவற்றைச் சுற்றி கதை நகர்கிறது.
படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார்.
கடலின் அலைகளுக்கு நடுவே பிறக்கும் காதலும், வாழ்க்கைக்காக அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களும் திரையில் அழுத்தமான கதையாகப் பதிவாகவுள்ள நிலையில், ‘மண்டாடி’ திரைப்படம் வரும் 2026 செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!
மண்டாடி டீசர் :

No comments:
Note: Only a member of this blog may post a comment.