ஜி.வி.பிரகாஷ் – கயாடு லோஹர் கூட்டணியின் ‘இம்மார்டல்’ ட்ரெய்லர் வெளியானது!
அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் உருவாகியுள்ள ‘இம்மார்டல்’ படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது!
காதலும் திகிலும் கலந்த வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், ஜி.வி. பிரகாஷ் குமாருடன் கயாடு லோஹர், டி.எம். கார்த்திக், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ள நிலையில், ட்ரெய்லர் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
காதல்… திகில்… மர்மம்… என பரபரப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ள ‘இம்மார்டல்’, வரும் செப்டம்பர் 4, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
‘இம்மார்டல்’ ட்ரெய்லர் :

No comments:
Note: Only a member of this blog may post a comment.