Facebook

test

Parimala and Co Movie Trailer | Tamil

பாண்டிராஜின் புதிய படைப்பு ‘பரிமளா அண்ட் கோ’  படத்தின் டிரெய்லர் வெளியானது !

பரிமளா அண்ட் கோ திரைப்படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் அதன் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. குடும்பம், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான அம்சங்களை இணைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

படத்தில் ஜெயராம், ஊர்வசி இவர்களுடன் மிஷ்கின், சாண்டி, அவந்திகா, யோகி பாபு, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி,  உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வெளியான டிரெய்லர் , குடும்ப உறவுகள், நகைச்சுவை தருணங்கள் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், படத்தின் கதைக்களம் குறித்து ஆர்வத்தை தூண்டும் பல சுவாரஸ்யமான காட்சிகளும் ட்ரைலரில் இடம்பெற்றுள்ளன.

பாண்டிராஜின் தனித்துவமான குடும்ப பொழுதுபோக்கு பாணியில் உருவாகியுள்ள பரிமளா அண்ட் கோ, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் வரும் ஜூன் ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது ,  ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.