Facebook

test

“I love Tamil and I’m learning this beautiful language.” – Krithi Shetty

எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும் , நான் இந்த அழகான மொழியைக் கற்று வருகிறேன் - நடிகை LIK பட விழாவில்  கீர்த்தி ஷெட்டி 


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் , அனிருத் இசையில் , பிரதீப் ரங்கநாதன் , கீர்த்தி ஷெட்டி , எஸ் ஜே சூர்யா மற்றும் பலர் நடித்து கடந்த ஏப்ரல் 10, 2026 அன்று திரையரங்குகளில் வெளியான "லவ் இன்சூரன்ஸ் கம்பெனி" (LIK) படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் , இளைஞர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது . 

இந்நிலையில் படத்தின் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று ஏப்ரல் 15, 2026 சென்னையில் நடைபெற்றது , இந்நிகழ்வில் பேசிய படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டி ,

"எனக்கு தமிழ் மிகவும் பிடிக்கும். என் அம்மா கோயம்புத்தூரில் படித்தார், ஆனால் அவர் எனக்கு தமிழ் கற்றுக் கொடுக்கவே இல்லை,  இப்போது நான் இந்த அழகான மொழியைக் கற்று வருகிறேன், அதை மிகவும் ரசித்துக்கொண்டிருக்கிறேன். 

டிரெய்லரைப் பார்த்த பிறகு பலர் என் கதாபாத்திரம் ஒரு ரோபோ போல இருப்பதாக நினைத்தார்கள், அதுவே இந்தப் படத்தின் முக்கிய வெற்றி. இப்போது, ​​எல்லோராலும் அந்தக் கதாபாத்திரத்துடன் தங்களை தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது.

விக்னேஷ் சிவன் இந்தப் படத்திற்கு உயிர் கொடுத்திருக்கும் விதம் உண்மையிலேயே அற்புதம். என் கதாபாத்திரமான தீமாவிற்கு நிறைய பாராட்டுகள் கிடைக்கின்றன,  நாங்கள் திரையரங்குகளுக்கும் சென்றோம், அங்கும் பார்வையாளர்களின் வரவேற்பு மிகவும் சாதகமாக இருந்தது , மேலும் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு உண்மையிலேயே அருமை, என்று தெரிவித்தார்" .

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.