Facebook

test

2026 March 6 Tamil Theatrical Release Movies

வரும் 2026 மார்ச் 6 ஆம் தேதி தமிழில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்கள் :


1. முஸ்தபா முஸ்தபா 

மாபோகோஸ் நிறுவனம் சார்பில் பிரதீப் மகாதேவன் தயாரிப்பில்,  எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் , இயக்குநர் பிரவீன் சரவணன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ் கதையின் நாயகனாக நடிக்கும் 'முஸ்தபா முஸ்தபா' படம் வரும் 2026 மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது . மேலும் இப்படத்தில் மோனிகா சின்னகோட்லா, மானசா சவுத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, லிவிங்ஸ்டன், சாம்ஸ் உட்பட பலர் நடித்துள்ளனர்.



2 .காதல் ரீசெட்  ரீபிட் 

டி ஸ்டுடியோஸ், மற்றும் சன்னி டென்வி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் , ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் , விஜய் இயக்கத்தில் , மதும்கேஷ், ஜியா சங்கர் ,  அர்ஜூன் அசோகன், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ள 'காதல் ரீசெட் ரிபீட்' படம் வரும் 2026 மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது . 



3. வடம் 

மாசாணி பிக்​சர்ஸ் சார்​பில் ஆர்​.​ராஜசேகர்  தயாரிப்பில், வி.கேந்​திரன் இயக்கத்தில் , டி.இமான் இசையில் , விமல் , நட்டி நட்​ராஜ், சனஸ்கா ஸ்ரீ, முனீஸ்​காந்த், பால சரவணன், ‘ஆடுகளம்​’ நரேன், மது சூதன் ராவ், தீபா, இந்​து ​மதி மணி​கண்​டன்​, ஷரவண சக்​தி, மூர்த்தி உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ள  ‘வடம்’ படம் வரும் 2026 மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது



4. ஓ பட்டர்ஃப்ளை 

ஆன்ட்ஹில் சினிமா நிறுவனம் , பாலம்பூர் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ள படம் " ஓ பட்டர்ஃப்ளை". இப்படத்தில் நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி மற்றும் கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்,  அறிமுக இயக்குநர் விஜய் ரங்கநாதன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். படம் வரும் 2026 மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது



5. 99/66 

மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் , எம்.எஸ்.மூர்த்தி கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து, தயாரித்து, இயக்கியுள்ள  "99/66 தொன்னூற்று ஒன்பது அறுபத்தியாறு" படம் வரும் 2026 மார்ச் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகர்களாக சபரி மற்றும் ரோகித் , கதாநாயகிகளாக ரக்சிதா மகாலட்சுமி மற்றும் ஸ்வேதா நடித்துள்ளனர் , மேலும் இவர்களுடன் சினே​கா, குமாரி கனிஷ்​கா, ஸ்ரீலே​கா, சிங்​கம் புலி, பி.எல்​.தேனப்​பன் மற்றும் பலர் நடித்துள்ளனர் .



6. அனோமி

பாவனா மற்றும் ரகுமான் நடித்து மலையாளத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற 'அனோமி: தி ஈக்வேஷன் ஆப் டெத்' , படம் வரும் 2026 மார்ச்  6 ஆம் தேதி தமிழில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது . ரியாஸ் மரத் இயக்கியுள்ள இப்படத்தில் பாவனா , ரகுமானுடன் பினு பப்​பு, விஷ்ணு அகஸ்த்​யா, அர்​ஜுன் லால், ஷெபின் பென்​சன் மற்​றும் த்ரிஷ்யா ரகு​நாத் மற்றும் பலர் நடித்துள்ளனர் , ஹர்​ஷவர்​தன் ரமேஷ்வர் இசையமைத்துள்ளார்.



7. தி ரைஸ் ஆஃப் அசோகா

 தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் உருவாகியுள்ள "தி ரைஸ் ஆஃப் அசோகா" திரைப்படம் வரும் 2026 மார்ச்  6 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது , வினோத் டோண்டேலே இயக்கியுள்ள இப்படத்தில்  சதீஷ் நீனாசம், பி.சுரேஷ், அச்யுத் குமார், கோபால் கிருஷ்ண தேஷ்பாண்டே, சம்பத் மைத்ரேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . பூர்ச்சந்திர தேஜஸ்வி இசையமைத்துள்ளார் . விருத்தி கிரியேஷன் மற்றும் சதீஷ் பிக்சர்ஸ் ஹவுஸ் சார்பில் வர்தன் நரஹரி, ஜெய்ஷ்ணவி மற்றும் சதீஷ் நீனாசம் இணைந்து தயாரித்துள்ளனர் .


8. வசூல் மன்னன் 

ஆறுமுகம் மாதப்பன் தயாரிப்பில் , பரணி இசையில் , வேல் குமரேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள "வசூல் மன்னன்' திரைப்படம் வரும் 2026 மார்ச்  6 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .


9. யார்ரா அந்த பையன் நான்தான் அந்த பையன்  

பால் ராஜ் எழுதி , இயக்கி மற்றும் தயாரித்துள்ள "யார்ரா அந்த பையன் நான்தான் அந்த பையன்" திரைப்படம் வரும் மார்ச்  6 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது . பால்ராஜ் , காயத்ரி ரெமா, சுவேதா ஸ்ரீ , ரவி மரியா , அம்பானி சங்கர் , படங்க சிவகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர் .  விஜய் பிரபு  இசையமைத்துள்ளார் .






No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.