Facebook

test

Silambarasan Drops Major Update on Arasan Movie

 மூன்று வித தோற்றத்தில் சிலம்பரசன் - அரசன் அப்டேட் : 

கலைப்புலி தாணு தயாரிப்பில் , வெற்றிமாறன் இயக்கத்தில் , அனிருத் இசையில் , சிலம்பரசன் நடிப்பில் "அரசன்" படம் உருவாகி வருகிறது , ஏற்கனவே வெளிவந்த ப்ரோமோ வீடியோ நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் , தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது . படத்தினை பற்றிய மேலும் சில அப்டேட்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சிலம்பரசன் பின்வருமாறு தெரிவித்துள்ளார் .

படத்தில் எனக்கு இரண்டு அல்லது மூன்று வித்தியாசமான தோற்றங்கள் உள்ளன, மேலும் எனது உடல் எடையையும் குறைத்துள்ளேன். வெற்றிமாறனின் பணிபுரியும் முறை மற்றும் அவரது திரைப்பட உருவாக்க பாணி மிகவும் தனித்துவமானது. நீங்கள் நேரில் பார்க்கும்போது அதனை இயல்பாகவே பாராட்டத் தொடங்குவீர்கள்.

அனிருத் உடனான எனது முதல் படம்  அரசன் தான்,  நான் நீண்ட காலமாக அவருடன் பணியாற்ற விரும்பினேன், அவரும் அவ்வாறே உணர்ந்தார். இறுதியாக அரசனுடன் அந்த சரியான வாய்ப்பு வந்தது என சிலம்பரசன் தெரிவித்துள்ளார் .

நன்றி : ஆனந்த விகடன் 

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.