இந்த வாரம் (டிசம்பர் 24 - 26 2025 ) ஓ டி டி தளங்களில் தமிழில் வெளியாகவுள்ள படங்கள் :
டிசம்பர் 24, 2025 :
1. மிடில் கிளாஸ்
நடுத்தரக் குடும்பத்தில் ஏற்படும் பொருளாதார பிரச்சனைகள் பற்றி பேசும் படம்
ஆக்சிஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் , கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் முனிஷ்காந்த், விஜயலட்சுமி, காளிவெங்கட், ராதாரவி, வேல ராமமூர்த்தி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு, மற்றும் பலர் நடித்து திரையரங்குகளில் வெளிவந்த " மிடில் கிளாஸ்" திரைப்படம் வரும் 2025 டிசம்பர் 24 ஆம் தேதி Zee5 தமிழ் தளத்தில் வெளியாகவுள்ளது .
2. ரஜினி கேங் :
நகைச்சுவை கலந்த பேய் கதை
ரமேஷ் பாரதி இயக்கத்தில், ரஜினி கிஷன் , திவிகா, கூல் சுரேஷ், முனீஷ்காந்த் , மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்து திரையரங்குகளில் வெளிவந்த " ரஜினி கேங் " திரைப்படம் வரும் 2025 டிசம்பர் 24 ஆம் தேதி Primevideo & SimplySouth தளங்களில் வெளியாகவுள்ளது .
டிசம்பர் 25, 2025 :
3. ஆந்திரா கிங் தாலுகா
தான் கொண்டாடும் ஒரு மாஸ் ஹீரோவுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒரு தீவிர ரசிகன் என்னவெல்லாம் செய்வான் என்பதே கதைக்களம் .
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் , விவேக் மற்றும் மெர்வின் இசையில் , மகேஷ் பாபு இயக்கத்தில், பாக்யஸ்ரீ போர்ஸ், ராம் பொத்தினேனி, உபேந்திரா மற்றும் பலர் நடித்து நடித்து திரையரங்குகளில் வெளிவந்த "ஆந்திரா கிங் தாலுகா" திரைப்படம் வரும் 2025 டிசம்பர் 25 ஆம் தேதி Netflix தளத்தில் வெளியாகவுள்ளது .
டிசம்பர் 26, 2025 :
4. ரிவால்வர் ரீட்டா
ரவுடிகளிடம் மாட்டிக்கொண்ட ஒரு ரகளைக் குடும்பம் செய்யும் டார்க் காமெடி தான் கதைக்களம்
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்து, ஷான் ரோல்டன் இசையில் , ஜேகே சந்துரு இயக்கத்தில் , கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், சுனில், ரெடிங் கிங்ஸ்லி, சென்ட்ராயன் மற்றும் பலர் நடித்து திரையரங்குகளில் வெளிவந்த " ரிவால்வர் ரீட்டா" திரைப்படம் வரும் 2025 டிசம்பர் 26 ஆம் தேதி Netflix தளத்தில் வெளியாகவுள்ளது .
%20OTT%20Release%20Movies%20in%20Kollywood%20(Tamil).png)




No comments:
Note: Only a member of this blog may post a comment.