Facebook

test

Aan Paavam Pollathathu Movie Box Office Report | 25 Day Poster

25 நாட்களை கடந்து நல்ல வசூலுடன் வெற்றிநடை போடும் "ஆண் பாவம் பொல்லாதது" :


 ட்ரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் , சித்து குமார் இசையில்,  கலையரசன் தங்கவேல் இயக்கத்தில்,  ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஷீலா, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், இயக்குநர் வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்த "ஆண் பாவம் பொல்லாதது" படம் கடந்த அக்டோபர் ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது  , இப்படத்தின் தமிழக உரிமையினை கைப்பற்றி வெளியிட்டது ஏஜிஸ் நிறுவனம். மாக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலுடன்  தற்போது  25 நாட்களை கடந்தும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது .


சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் , தமிழக வசூலில் இதுவரை ஒட்டுமொத்த வசூலில் 20 கோடியை கடந்திருக்கிறது இந்த வசூல் படக்குழுவினரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் இப்படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமத்தை முன்னதாகவே படக்குழு விற்றுவிட்டது. 2025  ஆம் ஆண்டின் சிறந்த படம் வசூலில் இப்படம் இணைந்துள்ளது .

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.